7 ஆம் வகுப்பு கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா

 1.வட அமெரிக்கா எப்போது கண்டுபிடிக்கப்பட்டது – 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி

2.வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும எவ்வாறு அழைக்கப்படுகிறது – புதிய உலகு

3.வட அமெரிக்காவை கண்டுபிடித்தவர் யார் –கிறிஸ்டோபர் கொலம்பஸ்

4.கிறிஸ்டோபர் கொலம்பஸ் வஅமெரிக்காவை எப்போதுகண்டுபிடித்தார் - 1492

5.இந்நிலப்பகுதி யாருடைய வருகைக்குப்பின் அமெரிக்கா என பெயரிடப்பட்டது – அமெரிக்கோ வெஸ்புகி

6.அமெரிக்கோ வெஸ்புகி வருகைப்புரிந்த ஆண்டு –1507

7.வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள வட அமெரிக்காவின் அட்சக்கோடுகள் என்ன – 7° வடக்கு முதல் 84° வடக்கு

8.வட அமெரிக்காவின் கடகரேகை (23½°) எதன் வழியாக செல்கிறது – மெக்ஸிகோ 

9.வட அமெரிக்காவின் ஆர்க்டிக் வளையம்(66½ °வ) எதன் வழியாக செல்கிறது – கனடா

10.மேற்கு கோளத்தில் முழுவதுமாக அமைந்துள்ள வட அமெரிக்காவின் தீர்க்கரேகைகள் என்ன – 53° மே முதல் 180° மே

11.தீர்க்கரேகைகளின் அடிப்படையில் மிக அதிகமான பரப்பளவை கொண்டிருப்பது எது – வட அமெரிக்கா

12.வட அமெரிக்கா எத்தனை நேர மண்டலங்களை உள்ளடக்கியது – ஏழு

13.வட அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு – 24,709,000 சதுர கிலோ மீட்டர்

14.உலகின் மொத்த பரப்பளவில் வட அமெரிக்கா எத்தனை சதவீதத்தை கொண்டுள்ளது – 16.50%

15.வட அமெரிக்காவின் மேற்கு எல்லை எது – பசிபிக் பெருங்கடல்

16.வட அமெரிக்காவின் வடக்கு எல்லை – ஆர்க்டிக் பெருங்கடல்

17.வட அமெரிக்காவின் தெற்கு எல்லை – தென் அமெரிக்கா

18.வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைப்பது எது– பனாமா நிலச்சந்தி

19.வட அமெரிக்காவை ஆசியாவில் இருந்து பிரிப்பது எது– பேரிங் நீர்ச்சந்தி

20.ஆசியா, ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கண்டம் எது – வட அமெரிக்கா

21.வட அமெரிக்கக் கண்டத்தின் மிகப்பெரிய‌ நாடு எது – கனடா

22.வட அமெரிக்கக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடு எது – ஐக்கிய அமெரிக்க நாடு

23.வட அமெரிக்கக் கண்டத்தின் மூன்றாவது பெரிய நாடு எது  –மெக்ஸிகோ 

24.மெக்ஸிகோவின் தென்பகுதி நாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது – மத்திய அமெரிக்கா

25.மத்திய அமெரிக்கா நாடுகள் யாவைநிகாராகுவா,ஹாண்டுராஸ்,குவாதமாலா, பனாமா,கோஸ்டாரிக்கா,எல்சால்வடார்

26.இரண்டு மிகப்பெரிய நிலப்பகுதிகளை இணைக்கும் சிறிய துண்டு– நிலச்சந்தி

27.இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை இணைக்கும் சிறிய நீர்ப்பரப்பு – நீர்ச்சந்தி

28.வட அமெரிக்காவின் உயரமான சிகரம் எது – மெகென்லீ

29.மெகென்லீ சிகரத்தின் உயரம் என்ன – 6194 மீட்டர்

30.வட அமெரிக்காவின் மிக ஆழமான பகுதி எது மரண பள்ளத்தாக்கு

31.கடல் மட்டத்திலிருந்து மரண பள்ளத்தாக்கின் உயரம் என்ன – 86 மீட்டர்

32.பூமியின் மிக பழைமையான மற்றும் இளமையான பாறைகள் எங்கு காணப்படுகிறது – மரண பள்ளத்தாக்கு

33.இயற்கை அமைப்பு பிரிவுகளின் அடிப்படையில் வட அமெரிக்கா எத்தனையாக பிரிக்கப்பட்டுள்ளது – நான்கு

34.வட அமெரிக்கக் கண்டத்தில் மேற்குப் பகுதியில் இளம் மடிப்பு மலைகளை நீண்ட மலைத்தொடர்களாக கொண்ட மலை எது – ராக்கி மலை

35.ராக்கி மலையின் அமைவிடம் – வடக்கில் அலாஸ்கா முதல் தெற்கில் பனாமா நிலச்சந்தி

36.ராக்கி மலைத்தொடரின் நீளம் எவ்வளவு – 4800 மீட்டர்

37.ராக்கி மலைத்தொடரின் அகலம் என்ன – 110 கி.மீ முதல் 480 கி.மீ வரை

38.ராக்கி மலைத்தொடர் எத்தனை இணை மலைத்தொடர்களை கொண்டுள்ளது – இரண்டு

39.ராக்கி மலைத்தொடரில் உள்ள இணை மலைத்தொடர்கள் யாவை –    ராக்கி( கிழக்கு மலைத்தொடர்) மற்றும் கடற்கரை மலைத்தொடர் (மேற்கு மலைத்தொடர்)

40.அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியா பள்ளத்தாக்கிற்கும்
பெரும்வடிநிலப்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள மலைத்தொடர் 
எது – சியார் நிவாரா

41.மெக்ஸிகோ நாட்டில் ‘சியார் நிவாரா’ எவ்வாறு அழைக்கப்படுகிறது – சியாரர் மாட்ரோ

42.பல இமங்கும் எரிமலைகளை கொண்டுள்ள வட அமெரிக்கா பகுதி எது – கார்டில் லெராஸ்

43.பசிபிக் வளையத்தின்‌ ஒரு பகுதியாக கருதப்படுவது எது – கார்டில் லெராஸ்

44.மேற்கத்திய கார்டி லெராஸ் என்றழைக்கப்படும் மலைத்தொடர் எது –ராக்கி மற்றும் கடற்கரை மலைத்தொடர்

45.ராக்கி மலைகளின் கிழக்கிலும் அப்பலேஷியன் மேற்கிலும் பரவியுள்ள பகுதி எது – வட அமெரிக்காவின் பெரும் சமவெளிகள்

46.பெரும் சமவெளிகளில் பாயும் ஆறுகள் யாவை – மிஸிஸிப்பி, மிஸ்செளரி

47.வட அமெரிக்காவின் மிக நீளமான ஆறுகள் யாவை – மிஸிஸிப்பி, மிஸ்செளரி

48.வட அமெரிக்காவின் நோன்பேனாவிலிருந்து மெக்ஸிகோ வளைகுடா வரை பாயும் நதிகள் எது – மிஸிஸிப்பி, மிஸ்செளரி

49.மிஸிஸிப்பி மற்றும் மிஸ்செளரி ஆறுகளின் நீளம் என்ன – 6114 கி.மீ

50.மிஸிஸிப்பி ஏரி எவ்வாறு புனைபெயரிட்டு அழைக்கப்படுகிறது – பெரிய சேற்று ஏரி

51.உலகின் நான்காவது மிகப்பெரிய நதி அமைப்பாக இருப்பது எது – மிஸிஸிப்பி, மெக்ஸிகோ 

52.மிஸ்செளரி ஆறு தோன்றிய இடத்திலிருந்து எத்தனை கி.மீ க்குப் பின் மிஸிஸிப்பி நதியுடன் இணைகிறது – 3700 கி.மீ

53.வட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய ஆற்றுப்படுகையாக இருக்கும் ஆறு – மெகென்லீ

54.மெகென்லீ ஆறு எங்கிருந்து பாயத் தொடங்குகிறது – கிரேட் ஸ்லேவ்

55.மெகென்லீ ஆறு எந்த கடலில் கலக்கிறது – ஆர்க்கிடிக் பெருங்கடல்

56.புனித லாரன்ஸ் ஆறு எங்கிருந்து பாயத் தொடங்குகிறது – ஒன்டேரியோ

57.புனித லாரன்ஸ் ஆறு எந்த கடலில் கலக்கிறது – அட்லாண்டிக் பெருங்கடல்

58.கொலராடோ ஆறு கொலம்பியா பீடபூமியில் உருவாக்கயுள்ள பள்ளத்தாக்கு எது – கிராண்ட் கேன்யான்

59.உலகப்புகழ் வாய்ந்த மிகப்பெரிய பள்ளத்தாக்கு எது – கிராண்ட் கேன்யான்

60.கிராண்ட் கேன்யான் பள்ளத்தாக்கு எங்கு உருவாக்கப்பட்டது – அரிசேனா மாகாணம் 

61.அரிசேனா மாகாணத்தில் எந்த ஆற்றினார் கிராண்ட் கேன்யான் உருவாக்கப்பட்டது – கொலராடோ

62.மேற்கு மலைத்தொடரில் இருந்து உருவாகும் யூகான் ஆறு ஆண்டின்எத்தனை மாதங்களுக்கு உறைந்த நிலையில் காணப்படுகிறது - 8 மாதங்கள்

63.அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் எல்லையாக அமைந்துள்ள ஆறு – ரியோ கிரண்டி

64.எந்த பகுதியில் உள்ள சிறு ஏரிகள் பொழுபோக்கிற்காக பயன்படுகிறது  – மினசோட்டா

65.பொழுதுபோக்கிற்காக பயன்படும் ஏரிகள் எவ்வாறு  அழைக்கப்படுகிறது – கிரேட் ஏரிகள்

66.கிரேட் ஏரிகள் முக்கிய தொகுப்பாக எத்தனைஏரிகளை கொண்டுள்ளது – ஐந்து 

67.கிரேட் ஏரிகளின் மிகப்பெரிய ஏரி எது – சுப்பீரியர் ஏரி

68.உலகின் பெரிய நன்னீர் ஏரி எது – சுப்பீரியர் ஏரி

69.கனடாவில் காணப்படும் பிற ஏரிகள் யாவை – வின்னிபெக் ஏரி, கிரேட் பேர் ஏரி, அதபாஸ்கா ஏரி

70.ஈரப்பதம் மிக்க குளிர்காலத்தையும், வறண்ட கோடை காலத்தையும்  உள்ளடக்கிய மத்திய தரைக்கடல் காலநிலை  அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் காணப்படுகிறது – கலிபோர்னியா

71.கோடை காலங்களில் வீசும் வட கிழக்கு பருவக்காற்றினால் கோடைமழையை பெறும் பகுதிகள் எது – மிஸிஸிப்பி,மிஸ்செளரி, வளைகுடா கடற்கரை பகுதிகள்

72. 30°  முதல் 60° வரையிலான மத்திய அட்சக்கோட்டுப் பகுதியில் மேற்கிலிருந்து கிழக்காக வீசும் நிலையான காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது - மேற்கத்திய காற்றுள்ள அல்லது எதிர் வர்த்தக காற்று

73.வட அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் காடுகளால் நிறைந்துள்ளது – 30%

74.மரக்கட்டை உற்பத்தியில் உலகின் மொத்த உற்பத்தியில் எத்தனை சதவீதத்தை வட அமெரிக்கா கொண்டுள்ளது – 20%

75.கோதுமை உற்பத்தியில் உலகின் முக்கிய நாடாக இருக்கும் நாடுகள் – கனடா‌, அமெரிக்கா

76.வட அமெரிக்காவின் சமவெளிகளில் விளைவிக்கப்படும் தானியங்கள் யாவை – கோதுமை, மக்காச்சோளம், ஓட்ஸ்,சோயாபீன்ஸ்,  பார்லி

77.வட அமெரிக்காவில் கோதுமையை அறிமுகப்படுத்தியவர்கள் யார் – ஐரோப்பியர்கள் 

78.வட அமெரிக்காவில் கோதுமை எங்கு பெருமளவில் விளைவிக்கப்படுகிறது – பிரெய்ரி புல்வெளி நிலங்கள்

79.உலகின் முதல் கோதுமை ஏற்றுமதியாளராக விளங்கும் நாடு எது –  அமெரிக்கா

80.வட அமெரிக்காவின் பூர்வீக மக்களின் முக்கிய உணவுப் பயிர் எது – சோளம்

81.வட அமெரிக்காவில் சோளம் அதிகளவில் எங்கு பயிரிடப்படுகிறது – தெற்கு புல்வெளி பகுதி

82.வட அமெரிக்காவின் மித வெப்ப மண்டல பயிர்கள் யாவை – பார்லி, ஓட்ஸ்

83.விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்தப்படுவது எது – பார்லி, ஓட்ஸ் 

84.வட அமெரிக்காவின் எந்த பகுதிகளில் ஓட்ஸ் மற்றும் பார்லி‌ உற்பத்தி செய்யப்படுகிறது – மினசோட்டா, வடடக்கோட்டா, வாஷிங்டன்

85.வட அமெரிக்காவில் பருத்தி அதிகமாக விளைவிக்கப்படும் நாடுகள் எது – டெக்சாஸ், கலிபோர்னியா, மிஸிஸிப்பி,தெற்கு புல்வெளிகள், மெக்ஸிகோ

86.மேற்கிந்திய தீவுகளின் முக்கியப் பண பயிராக விளங்குவது எது –கரும்பு

87.உலகின் சர்க்கரை கின்னம் என்றழைக்கப்படும் நாடு எது – கியூபா

88.சமையல் எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுவது – சோயாபீன்ஸ் 

89.கால்நடைகள் மற்றும் பன்றிகளுக்கு உணவாக பயன்படுத்தப்படுவது – உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு

90.சிட்ரஸ் வகை பழங்கள் எங்கு வளர்க்கப்படுகிறது – டெக்சாஸ், கலிபோர்னியா, கிரேட் ஏரி பகுதிகள்

91.கால்நடை வளர்த்தல் எங்கு வர்த்தக ரீதியில் நடைபெறுகிறது – பிரெட்ரின் வறண்ட பகுதிகள்

92.உலகின் மொத்த கறி உற்பத்தியில் வட அமெரிக்கா எத்தனை பங்கு  கொண்டுள்ளது – ¼

93.உலகின் கறி உற்பத்தியில் அதிகமான உற்பத்தியாளராக இருக்கும் நாடு எது – அமெரிக்கா

94.பால்பண்ணை பராமரிப்பு தொழில் எங்கு அதிக அளவில் நடைபெறுகிறது – பிரெய்ரி, பெரும் ஏரிகள்,அட்லாண்டிக் கடற்கரை பகுதி

95.உலகின் மொத்த பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில்
எத்தனை சதவீதத்தை அமெரிக்கா கொண்டுள்ளது – 25%

96.உலகின் மிகச்சிறந்த மீன்பிடி தளம் எது – கிராண்ட் பேங்க்

97.வட அமெரிக்காவில் காண்ப்படும் முக்கிய மீன் வகைகள் யாவை –  காட்,  ஹெர்ரிங், மெக்கில்,  சால்மோன், ஹாலிபட்

98.வட அமெரிக்காவில் பெட்ரோலிய படிவுகள் எங்கு காணப்படுகிறது – கிராண்ட் பேங்க்

99.உலகின் முன்னணி உற்பத்தியாளராக திகழும் நாடுகள் யாவை – அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ

100.வட அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிற்சாலைகளின்‌ பங்களிப்பு எத்தனை சதவீதம் ஆகும் – 25%

101.வட அமெரிக்காவின் முக்கிய இரும்பு எஃகு தொழிற்சாலைகள் யாவை – பிட்ஸ்பர்க், சிக்காகோ, பிர்மன்ஹாம்

102.உலகின் மொத்த மரக்கூழ் மற்றும் செய்தித்தாள் உற்பத்தியில் எத்தனை சதவீதம் வட அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிறது – 50%

103.உலகின் அனைத்து வகையான காகிதங்கள் உற்பத்தி மற்றும்  ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடு – கனடா

104.கனடாவில் அதிக காகித தொழிற்சாலை எங்கு காணப்படுகிறது –  ஒன்டாரியோ

105.70% கம்பளி தொழிற்சாலைகள் எங்கு அமைந்துள்ளது – புதிய இங்கிலாந்து பகுதி

106. வட அமெரிக்காவின் முக்கிய ஆடை தொழிற்சாலைகள் எங்கு அமைந்துள்ளது – டெக்சாஸ், கலிபோர்னியா,மிஸிஸிப்பி, அரிசோனா, அர்கண்சஸ், லூசியானா

107. கனடாவின் முக்கிய ஆடை தொழிற்சாலைகள் எங்கு அமைந்துள்ளது – டொரன்டோ, கான்வெல், கிங்ஸ்டன்

108.அமெரிக்காவிலுள்ள முக்கிய இறைச்சி பதப்படுத்தும் மையங்கள் யாவை – சிக்காகோ, புனித லூயிஸ்
 
109.கனடாவிலுள்ள முக்கிய இறைச்சி பதப்படுத்தும் மையங்கள் யாவை – கத்தேரி, வின்னிபெக்

110.2018 ஆம் ஆண்டின கணக்கின்படி உலக மக்கள் தொகையில் வடஅமெரிக்கா எத்தனை சதவீதத்தை கொண்டுள்ளது – 4.77%

111.நிலப்பரப்பின் அடிப்படையில் மிகப்பெரிய நாடு எது – கனடா

112.வட அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் எது – மெக்ஸிகோ 

113.வட அமெரிக்காவின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு – ஒரு சதுர கி.மீ க்கு 20 நபர்கள்

114.வட அமெரிக்காவில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள்யாவை – வட அமெரிக்காவின் கிழக்கு பகுதிகள், கிரேட் ஏரி பகுதி, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா

115. வட அமெரிக்காவில் மிதமான மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள் யாவை – வட அமெரிக்காவின் மத்தியப் பகுதிகள், மத்திய  உயர்நிலங்கள்,மெக்ஸிகோ உயர்நிலங்கள், கனடாவின்‌ மத்திய மற்றும்
 மேற்கு பகுதிகள்

116. வட அமெரிக்காவில் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள் யாவை - வடக்கு கனடா, அலாஸ்கா, ராக்கி மலைகள், பாலைவனப்பகுதி

117.கடும் குளிர் மற்றும் வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் எங்குமீன்கள் அதிகம் கிடைக்கிறதோ அங்குnவாழ்கிறார்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் - எஸ்கிமோக்கள்

118.பனிக்கட்டிகளை கொண்டு எஸ்கிமோக்கள் அமைத்த வீடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறத – இஃக்லூ

119.எந்த நெடுஞ்சாலை வடமேற்கில் அலாஸ்காவையும் தெற்கில் பனாமாவையும் இணைக்கறது – பான் அமெரிக்கன்

120.மேற்கு, கிழக்கு கடற்கரையில் உள்ள அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கும் ரயில் பாதை – டிரான்ஸ் கான்டினென்டல், டிரான்ஸ் கனடியன்

121.உலகின் மிகப்பெரிய இரயில்வே முனையம் எங்கு அமைந்துள்ளது – சிக்காகோ

122.உலகின் பரபரப்பான இரயில் நகரங்களுள் ஒன்றான வட அமெரிக்கா நகரம் எது – நியூயார்க் 

123.னாமா கால்வாய் எப்போது அமைக்கப்பட்டது – 1914

124.பனாமா கால்வாயின் நீளம் என்ன – 80 கி.மீ

125.அட்லாண்டிக் பெருங்கடலையும் பெருங்கடலையும் இணைக்கும் நிலச்சந்தி எது – பனாமா கால்வாய்

126.வட அமெரிக்காவின் முக்கிய உள்நாட்டு துறைமுகங்கள் யாவை – கியூபெக் நகரம், மான்ட்ரியல், பாஸ்டன்,நியூயார்க், பிலடெல்பியா, சார்லஸ்டன், நியூ ஆர்லியன்ஸ்

127.வட அமெரிக்காவின் முக்கிய துறைமுகங்கள் யாவை – நியூயார்க், வான்கூவர், சான்பிரான்சிஸ்கோ

128.வட அமெரிக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் யாவை – நியூயார்க், சிக்காகோஒ,லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, டொராண்டோ, மாண்ட்ரீல், மெக்ஸிகோ

129.வட அமெரிக்காவின் முக்கிய வர்த்தக நாடுகள் யாவை – சீனா,  இந்தியா, ஜப்பான், ஐரோப்பா

130.உலகின் தலைசிறந்த சாலைகள் வட அமெரிக்காவில் எங்கு அமைந்துள்ளன‌ - அமெரிக்கா, கனடா

மேலும் அறிந்து கொள்க
👇
வட அமெரிக்காவின் முக்கிய கனிமங்கள் 















கண்டங்களும் அதன் உயரமான‌ சிகரங்களும்










வட அமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் காடுகளின் வகைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள்

வட அமெரிக்காவின் மக்கள் தொகை மற்றும் அடர்த்தி 








Comments

Popular posts from this blog

NMMS Previous Year Question Papers

NMMS TEST 7

NMMS TEST 1