8 ஆம் வகுப்பு கண்டங்களை ஆராய்தல் - ஆப்பிரிக்கா
1.ஆசியாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கட் தொகையை கொண்ட இரண்டாவது கண்டம் எது – ஆப்பிரிக்கா
2.ஆப்பிரிக்காவின் பரப்பளவு எவ்வளவு – 30.36 மில்லியன் சதுர கி.மீ
3. புவிநடுக்கோடு, மகரரேகை போன்ற முக்கிய அட்சங்கள் கடந்து செல்லும் ஒரே கண்டம் எது – ஆப்பிரிக்கா
4. வடக்கு தெற்காக ஆப்பிரிக்க ண்டத்தின் நீளம் என்ன – 7623 கி.மீ
5. கிழக்கு மேற்காக ஆப்பிரிக்க கண்டத்தின் நீளம் என்ன – 7260 கி.மீ
நாடு எது – கானா
7. கானா நாட்டின்
தலைநகரம் எது - அக்ரா
8. முதன்மை தீர்க்கரேகை எந்த இடத்தின் அருகில் செல்கிறது – அக்ரா
ஆய்வாளர்கள் – லிவிங்ஸ்டன், ஸ்டோன்லி
10. ஆப்பிரிக்காவில்
மனிதனின் மூதாதையர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக ஆய்வுகள்
கூறுகின்றது – 5 மில்லியன்
அழைக்கப்படும் கண்டம் எது – ஆப்பிரிக்கா
12.
‘இருண்ட கண்டம்’ என்று
அழைக்கப்படும் கண்டம் – ஆப்பிரிக்கா
பயன்படுத்தியவர் – ஹென்றி எம்.ஸ்டான்லி
14.
ஆப்பிரிக்க
கண்டம் எத்தனை நாடுகளை உள்ளடக்கியது – 54 நாடுகள்
15.
புவியியல் அமைவிட
அடிப்படையில் ஆப்பிரிக்கா எத்தனையாக பிரிக்கப்பட்டுள்ளது – 5
16.
வட மேற்கு
ஆப்பிரிக்க நாடுகளான மொராகோ, அல்ஜீரியா, லிபியா, மோரிடானியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகளின் குழு எவ்வாறு
அழைக்கப்படுகிறது – மேக்ரெப்
17.
மேக்ரெப் என்ற
அரபு மொழிச் சொல்லின் பொருள் என்ன – மேற்கு
18.
சகாரா பாலைவனம்
எங்கு அமைந்துள்ளது – ஆப்பிரிக்காவின்
வட பகுதி
19. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல பாலைவனம் எது – சகாரா
20.
சகாரா
பாலைவனத்தின் பரப்பளவு எவ்வளவு – 9.2 மில்லியன் சதுர கி.மீ
21. சகாராவின் மேற்கு
எல்லை எது? – அட்லாண்டிக் பெருங்கடல்
22.
சகாரா
பாலைவனத்தின் கிழக்கு எல்லை எது – செங்கடல்
23.
சகாரா
பாலைவனத்தின் வடக்கு எல்லை எது – மத்திய தரைக்கடல்
24.
சகாரா
பாலைவனத்தின் தெற்கு எல்லை எது – சாஹேல்
25.
சகாரா பாலைவனம் எத்தனை நாடுகளில் பரவியுள்ளது – 11 நாடுகள்
28. சகாராவின் ஆழமான பகுதி எது – கட்டாரா ஊதுபள்ளம்
29. கட்டாரா ஊதுபள்ளம் எந்த நாட்டில் அமைந்துள்ளது – எகிப்து
30.
சகாரா பாலைவனத்தின் வழியாக பாயும் நதிகள் யாவை – நைல், நைஜர்
31. அட்லஸ் மலை சகாராவின் எந்த பகுதியில் அமைந்துள்ளது – வடமேற்கு
32.
‘இளம் மடிப்பு’ மலை என்று
அழைக்கப்படுவது – அட்லஸ் மலை
33. மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலை சகாரா பாலைவனத்திலிருந்து பிரிக்கும் மலை எது – அட்லஸ் மலை
34.
அட்லஸ் மலையின் உயர்ந்த சிகரம் எது – டோப்கல்(4167மீ)
35.
‘சாஹேல்’ என்பதன் பொருள் என்ன – விளிம்பு
அல்லது எல்லை
36.
வடக்கில் உள்ள சகாரா பாலைவனத்திற்கும் தெற்கில் உள்ள சவானா
புல்வெளிக்கும் இடையில் அமைந்துள்ள பகுதி என்ன – சாஹேல்
37.
கிழக்கு மேற்காக சாஹேல் பகுதியின் நீளம் எவ்வளவு – 4000
கி.மீ
38.
சாஹேல் பகுதியின் மொத்த பரப்பளவு என்ன – 3 மில்லியன்
சதுர கி.மீ
39.
சவானா பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய சமவெளி எது? – செரன்கோட்டி
40. செரன்கோட்டி சமவெளிகள் அனைத்தும் எவ்வாறு அழைக்கப்படுகிறது – திறந்தவெளி மிருக்காட்சி சாலை
41.
புவியின் உட்பகுதியில் மேற்பரப்பிற்கு அருகில் நிலவியல்
தட்டுகளின் நகர்வுகளால் உருவாவது எது – பிளவு பள்ளத்தாக்கு
42.
ஆசியாவின் வடக்கு சிரியாவிலிருந்து ஆப்பிரிக்காவின் மத்திய
மொசாம்பிக் வரை பரவியுள்ள பெரிய பள்ளத்தாக்கின் நீளம் என்ன? – 6400
கி.மீ
43.
புவியில் காணப்படும் உறையாத மேற்பரப்பு நன்னீரில் எத்தனை
சதவீதம் ஆப்பிரிக்க ஏரிகளில் காணப்படுகிறது – 25%
எண்ணிக்கை என்ன – 7
45.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது – விக்டோரியா
46. உலகின் முதலாவது பெரிய ஏரி எங்கு அமைந்துள்ளது - அமெரிக்கா ஐக்கிய நாடு
47. அமெரிக்காவில் அமைந்துள்ள உலகின் பெரிய ஏரி எது - சுப்பீரியர் ஏரி
48.
உலகின் இரண்டாவது பெரிய ஏரி எது - விக்டோரியா
49.
நைல் நதியின் பிறப்பிடம் எது – விக்டோரியா
50. டாக்கானிக்கா ஏரி எங்கு அமைந்துள்ளது - பிளவு பள்ளத்தாக்கு பகுதி
நன்னீர் ஏரி எது – டாங்கானிக்கா
52.
ஆப்பிரிக்காவில் காணப்படும் முக்கிய ஏரிகள் யாவை – ஆல்பர்ட், எட்வர்ட், கல், மாலாவி, துர்கானா
53.
எந்த மலையின் உச்சியிலுள்ள பனிப்படிவுகள் 20 ஆம்
நூற்றாண்டிலிருந்து மறைந்து வருகின்றன – கிளிமஞ்சாரோ
54.
கிளிமஞ்சாரோ பகுதியில் எந்த ஆண்டில் பனிப்படிவுகள் இல்லாத
நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது – 2025
55. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உயர் நிலங்கள் எத்தியோப்பியாவிலிருந்து எங்கு வரை நீண்டுள்ளது – நன்னம்பிக்கை முனை
56.
ஆப்பிரிக்க உயர் நிலங்களின் பகுதியில் அமைந்துள்ள உயர்ந்த
சிகரம் எது – கிளிமஞ்சாரோ
57. கிளிமஞ்சாரோவின் உயரம் என்ன – 5895மீ
58. கிழக்கு ஆப்பிரிக்க உயர் நிலங்களின் பகுதியில் அமைந்துள்ள முக்கிய மலைத் தொடர்கள் யாவை – கென்யா, ருவான் சேரி
59.
கிழக்கு ஆப்பிரிக்கா நெடுகிலும் நீண்டுள்ள கடற்கரை எது – சுவாலி
கடற்கரை
60.
சோமாலியா முதல் மொசாம்பிக் வரை இந்திய பெருங்கடலை ஒட்டி
நீண்டுள்ள சுவாலி கடற்கரையின் நீளம் என்ன – 1610 கி.மீ
61.
சுவாலி கடற்கரை பகுதியில் வாழும் மக்கள் எவ்வாறு
அழைக்கப்படுகிறார்கள் – சுவாலிகள்
62.
மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் புவிநடுக்கோட்டின்
இருப்புறங்களிலும் அமைந்துள்ள பகுதி என்ன – காங்கோ
வடிநிலம் அல்லது ஜையர் வடிநிலம்
63.
காங்கோ வடிநிலத்தின் பரப்பளவு எவ்வளவு - 3.4 கி.மீ க்கு
அதிகம்
64. அமேசான் ஆற்று வடிநிலத்தை அடுத்து உலகின் இரண்டாவது பெரிய ஆற்று நிலம் எது – காங்கோ வடிநிலம்
65.
தென் ஆப்ரிக்காவின் பெரும் பகுதி எது – பீடபூமிகள்
66.
ட்ராகன்ஸ் பெர்க் மலைத்தொடர் எங்கே அமைந்துள்ளது – தென்
ஆப்பிரிக்கா
நீளம் என்ன – 1125 கி.மீ
68.
ட்ராகன்ஸ் பெர்க்கின் உயர்ந்த சிகரம் எது – தபனாநிட்
லியானா.
69.
தபனாநிட் லியானாவின் உயரம் என்ன – 3482 மீ
70.
தபனாநிட் லியானாவை சூழ்ந்துள்ள புல்வெளிகள் எவ்வாறு
அழைக்கப்படுகிறது – வெல்டு
71.
தென் ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள பாலைவனம்
எது – கல்வாரி
72.
ஆப்பிரிக்காவின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பாலைவனம்
எது – நமீப்பாலைவனம்
73. தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் பாலைவனம் உண்மையில் பாலைவனம் அல்ல மாறாக ஆரஞ்சு மற்றும் ஜாம்பசி நதிகளுக்கு இடையே அமைந்துள்ள வறண்ட முட்புதர் நிலமாக இருப்பது எது – கல்வாரி
74.
தென் ஆப்பிரிக்காவில் அரை வறண்ட பிரதேசங்களில்
மேற்கொள்ளப்படும் செம்மறி ஆடு வளர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது – காரூஸ்
75.
உலகின் மிக நீளமான நதி – நைல் நதி
76.
நைல் நதியின் நீளம் என்ன – 6650 கி.மீ
77.
நைல் நதி எத்தனை துணை ஆறுகளை கொண்டுள்ளது – 2
78.
நைல் நதியின் துணை ஆறுகள் யாவை – வெள்ளை நைல், நீல நைல்
79.
வெள்ளை நைல் எங்கு உற்பத்தி ஆகிறது – புருண்டி
80.
நீல நைல் நதி எங்கு உற்பத்தி ஆகிறது – எத்தியோப்பியா
81.
வெள்ளை நைல் மற்றும் நீல நைல் நதி எங்கு இணைந்து நைல் நதியை
தோற்றுவிக்கிறது – கார்ட்டூன்(சூடான்)
82. ‘ஆப்பிரிக்க ஆறுகளின் தந்தை’ என்றழைக்கப்படும் நதி – நைல் நதி
83.
‘எகப்தின் நன்கொடை' என்றழைக்கப்படும்
நதி எது – நைல் நதி
84.
ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நதி எது – காங்கோ ஆறு
85. ஜாம்பியாவின் வடகிழக்கு உயர் நிலங்களில் அமைந்துள்ள டாங்கானிகா மற்றும் நையாசா ஏரிகளுக்கு இடையே உற்பத்தியாகும் நதி எது – காங்கோ ஆறு
86. காங்கோ நதியின் நீளம் எவ்வளவு – 4700 கி.மீ
87.
காங்கோ நதி எதன் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது
– மேற்கு மத்திய ஆப்பிரிக்கா
88.
ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நதி எது? - நைஜர்
89.
கினியாவின் உயர் நிலங்களில் உற்பத்தியாகும் நதி எது – நைஜர்
90.
நைஜர் நதியின் நீளம் எவ்வளவு – 4184
91.
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கினியா வளைகுடாவில் கலக்கும்
நதி எது – நைஜர்
92.
ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய நதி – ஜாம்பசி
93.
ஜாம்பசி எங்கு உற்பத்தி ஆகிறது – வடமேற்கு
ஜாம்பியா
94.
ஜாம்பசி நதியின் நீளம் எவ்வளவு – 2574
95.
ஜாம்பசி நதி எங்கு கடலில் கலக்கிறது – இந்தியப்
பெருங்கடல்
96. ஜாம்பசி நதி எங்கு உற்பத்தியாகிறது - வட மேற்கு ஜாம்பியா
97.
உலக புகழ்பெற்ற ‘விக்டோரியா’ நீர்வீழ்ச்சி
எந்த நதியால் உருவாக்கப்பட்டது – ஜாம்பசி
98.
விக்டோரியா நீர்வீழ்ச்சியின் உயரம் எவ்வளவு – 108மீ
99.
ஆப்பிரிக்காவின் ‘வாழ்வாதார நதி’ என்றழைக்கப்படும்
நதி எது – ஜாம்பசி
100.
ஆப்பிரிக்காவின் காலநிலை எத்தனை மண்டலங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது – 6
வரை அமைந்துள்ளன – 20 முதல் 30
102. உலகின் மிக அதிக வெப்பநிலை(58 டிகிரி செல்சியஸ்) ஆப்பிரிக்காவில்
எங்கு பதிவாகியுள்ளது – அல்அஸியா(லிபியா)
103. மிகக் குறைந்த வெப்பநிலையில் (-24 டிகிரி
செல்சியஸ்) எங்கு பதிவாகியுள்ளது – இர்ப்பான்(மொராக்கோ)
104. ஆப்பிரிக்காவின் முக்கியமான மர வகைகள் யாவை – பாபோ, பீவர், சவ்சேச்
105. சகாரா பாலைவனத்திலிருந்து கினியா கடற்கரையை நோக்கி வீசும்
வறண்ட வெப்ப புழுதி தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது – ஹார்மாட்டன்
106. சகாரா பாலைவனத்திலிருந்து மத்திய தரைக்கடல் நோக்கி வீசும்
வெப்ப தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது – சிராக்கோ
107. புவியின் அணிகலன் என்றழைக்கப்படுவது எது – வெப்ப மண்டல
காடுகள்
108. உலகின் மாபெரும் மருந்தகம் என்றழைக்கப்படுவது – வெப்ப மண்டல
காடுகள்
109. மிதவெப்ப மண்டல புல்வெளிகள், மத்திய
தரைக்கடல் மற்றும் நைல் நதி பள்ளத்தாக்கு பயரிடப்படுவது – கோதுமை
110. கினியா கடற்கரை, மொசாம்பிக், மடகாஸ்கர்
மற்றும் நைல் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயிரிடப்படுவது – நெல்
111. பீடபூமி பகுதி அனைத்திலும் பயிரிடப்படுவது – மக்காச்சோளம், தினை வகை
பயிர்கள்
112. ஆப்பிரிக்காவின் முக்கிய பணப்பயிர் – பருத்தி
113. உலகத்தரம் வாய்ந்த நீண்ட இழைப் பருத்தி எங்கு
பயிரிடப்படுகிறது – எகிப்து, சூடான்
114. காபி எங்கு பயிரிடப்படுகிறது – எத்தியோப்பியா
கானா நாடு
116. எண்ணெய் பனை எங்க பயிரிடப்படுகிறது – மேற்கு
ஆப்பிரிக்கா
117. ஆப்பிரிக்காவின் முக்கிய பயிர் வகைகள் யாவை – கரும்பு, சணல், இரப்பர், புகையிலை
118. கரும்பு, ரப்பர், சணல், புகையிலை போன்ற பிற முக்கிய பயிர்கள் எங்கு பயிரிடப்படுகிறது - கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகள்
119. ஆப்பிரிக்காவில் வைர சுரங்கங்கள் எங்கு காணப்படுகிறது – தென்
ஆப்பிரிக்கா, காங்கோ, போஸ்ட்வானா, சியராலியோன், அங்கோலா
120. ஆப்பிரிக்காவின் முக்கிய வைர உற்பத்தி மையம் எங்கு உள்ளது – கிம்பர்லி
121. ஆப்பிரிக்காவில் அதிக எண்ணெய் வளத்தை கொண்டுள்ள நாடுகள் எது – அங்கோலா, நைஜீரியா, காபன், காங்கோ
122. ஆப்பிரிக்காவில் தங்கம் காணப்படும் நாடுகள் எவை – தென் ஆப்பிரிக்கா, நமிபியா, மேற்கு ஆப்பிரிக்கா, கானா
123. ஆப்பிரிக்க கண்டத்தில் காணப்படும் கணிமங்கள் யாவை – குரோமியம்,கோபால்ட், தாமிரம், இரும்பு
தாது, மக்னீசியம், துத்தநாகம், நிக்கல்
124. ஆப்பிரிக்காவின் முக்கிய தலைநகரங்களையும் பிற பகுதிகளையும் இணைப்பது எது – வான்வழிப் போக்குவரத்து
125. உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகையை கொண்ட கண்டம் எது – ஆப்பிரிக்கா
126. ஐக்கிய நாட்டு சபை மதிப்பீட்டின்படி(2019) ஆப்பிரிக்காவின்
மக்கள் தொகை எவ்வளவு – 131 கோடி
127. ஆப்பிரிக்காவின் சராசரி மக்கள் அடர்த்தி என்ன – ஒரு ச.கி.மீ க்கு 45
நபர்கள்
128. ஆப்பிரிக்காவின் மொத்த தொகையில் எத்தனை சதவீத மக்கள்
நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர் – 41%
129. ஆப்பிரிக்காவின் மொத்த தொகையில் எத்தனை சதவீத மக்கள்
கிராமப்புறத்தில் வசிக்கின்றனர் – 59%
130. ஆப்பிரிக்காவில் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி எது – நைல் டெல்டா, தென்
ஆப்பிரிக்கா
131. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது – நைஜீரிய
132. நைஜீரியாவை தொடர்ந்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது – எத்தியோப்பியா
133. ஆப்பிரிக்காவின் முக்கிய பழங்குடி இனங்கள் யாவை – அபர், பாட்வா, புஷ்மன், டிங்கா, மசாய், பிக்மீஸ், ஜுலு, சுவான், எஃபி
134. ஆப்பிரிக்காவின் முக்கிய பன்னாட்டு விமான நிலையங்கள் யாவை – கெய்ரோ, ஜோக்கன்ஸ்
பர்க், நைரோபி, டாக்கா, அடிஸ்-அபாபா, காஸாபிளாங்கா, டர்பன், டெளலா, லோகோஸ்
135. இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆப்பிரிக்காவின் முக்கிய
துறைமுகங்கள் யாவை – டர்பன், தர்-இ-சலாம், மொஹாபு
136. மத்திய தரைக்கடலில் உள்ள ஆப்பிரிக்காவின் முக்கிய
துறைமுகங்கள் யாவை – போர்ட்சைடு, அலெக்சாந்திரியா
137. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஆப்பிரிக்காவின் முக்கிய
துறைமுகங்கள் யாவை – கேப்டவுன், அல்ஜியஸ், அபிட்ஜன்
138. ஆப்பிரிக்காவில் சாலை மற்றும் இருப்புப் பாதை போக்குவரத்து
வளர்ச்சி அடைந்த பகுதிகள் யாவை – தென் ஆப்பிரிக்கா, கென்யா, லிபியா, மொராக்கோ, நைஜீரிய
8th SCIENCE AND SOCIAL NMMS MODEL QUESTION PAPERS
Comments
Post a Comment