8 ஆம் வகுப்பு கண்டங்களை ஆராய்தல் - ஆஸ்திரேலியா
1. கடைசியாக கண்டறியப்பட்ட கண்டம் எது – ஆஸ்திரேலியா
2. உலகின் மிகப்பெரிய
தீவாகவும் மிகச்சிறிய கண்டமாகவும் இருப்பது எது? – ஆஸ்திரேலியா
3. ஒரே நாடாக
கருதப்படும் ஒரே கண்டம் எது – ஆஸ்திரேலியா
4. ஆஸ்திரேலியா
கண்டம் 1770 இல் எந்த ஆங்கில மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்டது – ஜேம்ஸ் குக்
5. ஆஸ்திரேலியாவின்
தென் அட்ச பரப்பு எவ்வளவு – 10°4
‘ முதல் 39°08‘
6. ஆஸ்திரேலியாவின்
கிழக்குத் தீர்ககத்தின் பரப்பு எவ்வளவு – 113°09
‘ முதல் 153°39 ‘
7. ஆஸ்திரேலியாவை
இரண்டு சம பங்குகளாக பிரிப்பது எது? – மகரரேகை
8. ஆஸ்திரேலியா
கண்டத்தின் மொத்த பரப்பளவு எவ்வளவு – 7.58 மில்லியன் சதுர கி.மீ
9. ஆஸ்திரேலியாவில்
உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை எவ்வளவு – 6
10. ஆஸ்திரேலியாவில்
உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை எவ்வளவு - 2
11.
ஆஸ்திரேலியாவின்
மாநிலங்கள் யாவை? – நியூ சவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மோனியா, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா
12.
ஆஸ்திரேலியாவின்
யூனியன் பிரதேசங்கள் யாவை – வடக்கு யூனியன் பிரதேசம், கான்பெரா
13.
ஆஸ்திரேலியாவின்
தலைநகரம் எது – கான்பெரா
14.
ஆஸ்திரேலியாவின்
முக்கிய நகரங்கள் யாவை – சிட்னி, பிரிஸ்பேன், அடிலைட், ஹோபார்ட், மெல்பெர்ன், பெர்த், டார்வின்
15.
ஆஸ்திரேலியாவில்
உள்ள தீவுகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு - 8222
16.
ஆஸ்திரேலியாவில்
உள்ள தீவுகள் யாவை - ரோட்னெஸ்ட், மேக்னடிக், பிட்ஸ்ராய், ப்ரேசர், பிலிப், லார்ட்ஹோவ், கங்காரு, ஒய்ட்சண்டே
17.
நிலத்தோற்றம் அடிப்படையில்
ஆஸ்திரேலியா எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது – மூன்று
18.
மூன்று இயற்கைப்
பிரிவுகள் யாவை – மேற்கு ஆஸ்திரேலிய பீடபூமி, மத்திய தாழ் நிலங்கள், கிழக்கு உயர் நிலங்கள்
19.
ஆஸ்திரேலியா
கண்டத்தின் மூன்றில் ஒரு பகுதியாக இருப்பது எது – மேற்கு ஆஸ்திரேலிய
பீடபூமி
20.
மேற்கு
ஆஸ்திரேலிய பீடபூமியின் பரப்பளவு என்ன – 2.7 மில்லியன் சதுர கி.மீ
21.
உலகின் மிகப்பெரிய ஒற்றைச் சிற்ப பாறை எங்கு அமைந்துள்ளது – ஆஸ்திரேலியா
22.
உலகின் மிகப்பெரிய ஒற்றை சிற்ப பாறை எது – அயர்ஸ்
அல்லது உலுரு பாறை
23.
ஆஸ்திரேலியாவின் இயற்கை அதிசயங்களில் ஒன்றாக உள்ள ஒற்றை
சிற்ப பாறை எது - அயர்ஸ் அல்லது உலுரு பாறை
24.
ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் சுண்ணாம்புப் பாறைத்
தூண்களின் பெயர் என்ன - அயர்ஸ் அல்லது உலுரு பாறை
25.
ஆஸ்திரேலியா பீடபூமியில் அமைந்துள்ள மலைத்தொடர்கள் யாவை -மெக்டோனஹ்
மற்றும் மஸ்கிரேவ்
26.
மரங்களற்ற சமவெளி எங்கு அமைந்துள்ளது – ஆஸ்திரேலியா
பீடபூமி
27.
மரங்களற்ற சமவெளியின் பெயர் என்ன – நல்லார்பார்
28.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது – பெரிய
விக்டோரியா
29.
வடக்கில் காண்பெண்டாரிய வளைகுடாவிலிருந்து தெற்கே இந்தியப்
பெருங்கடல் வரை நீண்டுள்ள பகுதி எது – மத்திய தாழ்
நிலங்கள்
30.
தாழ் நிலங்களின் மத்தியில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின்
மிகப்பெரிய உலர் நீர் ஏரி எது – ஐர் ஏரி
31.
மத்திய தாழ் நிலங்களின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள
ஆற்று தொகுப்பு எது – முர்ரே-டார்லிங்
32.
வடக்கிலுள்ள யார்க் முனையிலிருந்து தெற்கில் டாஸ்மேனியா வரை
பரவியுள்ள பகுதி எது – கிழக்கு உயர் நிலங்கள்
33.
கிழக்கு உயர் நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது – பெரும்
பிரிப்பு மலைத்தொடர்
34.
ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலைத்தொடர் எது – ஆல்ப்ஸ்
35.
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் எது - கோசியஸ்கோ
36.
கோசியஸ்கோ சிகரத்தின் உயரம் எவ்வளவு – 2230
மீட்டர்
37.
ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் ஆழமான
படுகை எது – ஆர்ட்டிசியன் படுகை.
38.
குயின்ஸ்லாந்து சில பகுதிகள் மற்றும் நியூ சவுத்வேல்ஸ், தெற்கு
ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு யூனியன் பிரதேசத்தின் வறண்ட மற்றும் அரை வறண்ட
பகுதியில் காணப்படும் வடிநிலம் - ஆர்டிசியன் வடிநிலப்பகுதி
39.
ஆர்டிசியன் வடிநிலப்பகுதியின் பரப்பளவு எவ்வளவு – 1.7 மில்லியன்
சதுர கி.மீ
40.
குயின்ஸ்லாந்தின் கிழக்கு கடற்கரையை ஒட்டிய வடகிழக்கு
பகுதியில் காணப்படும் பகுதி எது – பெரிய பவளத்திட்டு தொடர்
41.
பெரிய பவளத்திட்டு தொடரின் நீளம் எவ்வளவு – 2300 கி.மீ
42.
ஆஸ்திரேலியா கண்டத்தின் அதிகபட்ச வெப்பநிலை எங்கு
பதிவாகியுள்ளது - பெளர்க்கி
43. பெளர்க்கியில் பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலை எவ்வளவு – 53 டிகாி செல்சியஸ்
44.
ஆஸ்திரேலியா கண்டத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை எங்கு
பதிவாகியுள்ளது – கான்பெரா
45. கான்பெராவில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச வெப்பநிலை எவ்வளவு - -22 டிகாி செல்சியஸ்
46. ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நதி எது – முர்ரே
47.
ஆஸ்திரேலியாவின் மொத்த பரப்பளவில் எவ்வளவு சதவீதத்தை முர்ரே
வடிநிலம் கொண்டுள்ளது – 14%
48. முர்ரே வடிநிலப்பகுதியின் நீளம் என்ன – 1 சதுர கிலோ மீட்டர்
49.
முர்ரே நதியின் நீளம் என்ன – 2508
50.
ஆஸ்திரேலியாவின் முக்கிய நதிகள் யாவை – டார்லிங், அலெக்சாண்டாரியா, முன்னம் பிட்ஜ், லாச்லன், ஸ்நானம்
51.
உலகின் இரண்டாவது பெரிய மிக வறண்ட நிலப்பரப்பை கொண்டுள்ள
கண்டம் எது – ஆஸ்திரேலியா
52.
ஆஸ்திரேலியாவை இரு சமபாங்களாக பிரிப்பது எது – மகரரேகை
53.
மேலைக் காற்றினால் ஆண்டு முழுவதும் மழையை பெறும் பகுதி எது – டாஸ்மேனியா
தீவு
54.
காடுகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகள் ஆஸ்திரேலியாவின்
பரப்பளவில் எத்தனை சதவீதத்தை கொண்டுள்ளது – 16%
55.
ஆஸ்திரேலியாவின் முக்கிய மர வகைகள் யாவை – யூக்கலிப்டஸ், அகேசியா, மெலுக்கா
56.
ஆஸ்திரேலியாவில் காணப்படும் பாலூட்டி வகைகளின் எண்ணிக்கை
எவ்வளவு – 400
57.
வயிற்றீல் பையுடைய பாலூட்டி இனங்களின் எண்ணிக்கை எவ்வளவு – 140
58.
ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு எது – கங்காரு
59.
ஆஸ்திரேலியாவில் காணப்படும் முக்கிய விலங்குகினங்கள் யாவை – கோலா, பிலேட்டிபஸ், வாலபி, ரிக்கோ
60.
ஆஸ்திரேலியாவில் காணப்படும் முக்கிய பறவை இனங்கள் யாவை – சிரிக்கும்
கூக்காபரா, ஈமு, ரெயின்போ, லோரிகட்
61.
ஆஸ்திரேலியாவில் உள்ள செம்மறி ஆட்டு பண்ணைகளில் பணிபுரியும்
மக்களை எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் – ஜாகருஸ்
62.
ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிமக்கள் யார் – அபாரிஜின்கள்
63.
டாஸ்மேனியா எவ்வாறு அழைக்கப்படுகிறது – ஆப்பிள்
தீவு
64.
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதிகளில் பயிரிடப்படுவது எவை – நெல், புகையிலை, பருத்தி.
65.
திராட்சை மற்றும் பழத்தோட்டங்களுக்கு பெயர் பெற்ற கண்டம்
எது – ஆஸ்திரேலியா
66.
ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய மாட்டு வகைகள் யாவை – ஜெர்சி, இல்லவர்ரா, அயர்ஷையர்
67.
ஆஸ்திரேலியாவின் பணப்பயிர் என்றழைக்கப்படுவது எது – ஆட்டு
உரோமம்
68.
ஆஸ்திரேலியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கனிம வளங்கள்
எத்தனை சதவீதத்தை கொண்டுள்ளது – 10%
69.
ஆஸ்திரேலியா முன்னணி உற்பத்தியாளராக இருக்கும் கனிமங்கள்
யாவை – பாக்சைட், லைமோனைட், சிர்கான், ரூட்டில்
70.
ஆஸ்திரேலியா இரண்டாவது முன்னணி உற்பத்தியாளராக இருக்கும்
கனிமங்கள் யாவை – தங்கம், ஈயம், லித்தியம், மாங்கனீசு, தாது, துத்தநாகம்
71.
ஆஸ்திரேலியா மூன்றாவது முன்னணி உற்பத்தியாளராக இருக்கும்
கனிமங்கள் யாவை – இரும்புத்தாது, யுரேனியம்
72. ஆஸ்திரேலியா நான்காவது முன்னணி உற்பத்தியாளராக இருக்கும் கனிமங்கள் யாவை – நிலக்காி
73.
நிலக்கரி வயல்கள் எங்கு உள்ளது – நியு
கேஸ்டல் முதல் சிட்னி வரை
74.
பாக்சைட் எந்த பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது – கார்ப்பென்டீரியா
வளைகுடா, பெர்த், டாஸ்மேனியா
75.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு எங்கு கிடைக்கிறது – பாஸ் நீர்
சந்தி மற்றும் மேற்கு பிரிஸ்பேன்
76.
யுரேனியம் தாதுக்கள் எங்க கிடைக்கிறது – ராம்
காடுகள் மற்றும் குயின்ஸ்லாந்து
77.
தங்கம் எங்கு கிடைக்கிறது – கால் கூர்லி, கூல் கார்லி
78.
ஆஸ்திரேலியாவில் மிதவெப்ப மண்டல புல்வெளிகள் எவ்வாறு
அழைக்கப்படுகிறது – டவுன்ஸ்
79.
2019 ஆம் ஆண்டின் கணக்கின்படி ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை
எவ்வளவு – 25.2 மில்லியன்
80.
உலக மக்கள் தொகையில் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை எவ்வளவு –
0.33%
81.
ஆஸ்திரேலியாவின் மக்கள் அடர்த்தி எவ்வளவு – 1 சதுர கிலோ
மீட்டருக்கு 3 நபர்
82.
ஆஸ்திரேலியாவின் நகர்புற மக்கள் தொகை எவ்வளவு –
85.7%
83.
மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி எது – தென்
கிழக்கு பகுதி
Comments
Post a Comment